பெருந்துறை சூலை 8:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று கொப்பரை தேங்காய் எனப்படும் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 247 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட தேங்காய் பருப்பு ஏல முறையில் விற்பனையானது. முதல் தர பருப்பு 92 ரூபாய் முதல் 103.50 ரூபாய் வரையிலும், இரண்டாம் தர பருப்பு 56.60 ரூபாய் முதல் 97 ரூபாய் வரையிலான விலையில் ஏலம் போனது. மொத்தம் இரண்டு லட்சம் கிலோ தேங்காய் பருப்பு ஏலம் மூலம் இரண்டு கோடியே மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today