அந்தியூர் சூலை 21:

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் 10 ஆயிரம் காய்கள் வரத்தாகி ஒரு தேங்காய் 6.10 முதல் 14.10 ரூபாய் வரையிலான விலையில் மொத்தம் 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு 99 மூட்டை வரத்தாகி 87.77 முதல் 100.69 ரூபாய் வரையிலான விலையில் 2.84 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நெல் 123 மூட்டை வரத்தாகி 12.30 முதல்- 22 ரூபாய் வரையிலான விலையில் 1.66 லட்சம் ரூபாய்க்கும், எள் 42 மூட்டை வரத்தாகி 88.50 முதல்- 99.25 ரூபாய் வரையிலான விலையில் மொத்தம் 2.78 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது. நிலக்கடலை 79 மூட்டை வரத்தாகி 61.30 முதல்- 64.10 ரூபாய் வரையிலான விலையில் மொத்தம் 1.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. மொத்த விளைபொருள் 343 மூட்டைகள் வரத்தாகி 10.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today