அந்தியூர் ஆக. 1:

அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியான, கத்தரி மலை 70க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவினர் இணைந்து போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு எஸ்.பி., சசி மோகன் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களையும், மலைவாழ் மக்களுக்கு  தற்பொழுது வழங்கப்படும் அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீடு, சலுகைகள் குறித்து விளக்கினார். அதனை தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், கத்தரிமலை கிராமம் மின் இணைப்பு இல்லாத பகுதி என்பதால் சோலார் லைட்டுகள் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று  இரண்டாம் அலையின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை, பெட்ஷீட் உள்ளிட்ட  நிவாரண பொருட்களை எஸ்.பி., வழங்கினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today