ஈரோடு நவ 22:

ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த மாவட்ட ஊராட்சிக்கு ரூ.3.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் மேம்படுத்துதல், குடிநீர் வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்கு ரூ.3.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த தலா ரூ.1 கோடியே 5 லட்சம், பொதுவான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/