ஈரோடு டிச 22:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டியில் ரூ.1.38 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சி, வில்லரசம்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  கலந்து கொண்டு, ஒண்டிக்காரன்பாளையம் மெயின் ரோடு, சானார்பாளையம் மாரியம்மன் கோவில் சாலை, வேலப்பக்கவுண்டன்வலசு காந்தி நகர் மெயின் சாலை, சத்யா நகர் மெயின் சாலை, சத்யா நகர் 3-வது குறுக்கு வீதி சாலை மற்றும் சத்யா நகர் 5வது குறுக்கு வீதி சாலை என மொத்தம் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today