ஈரோடு நவ 15:
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மழையால் வரத்து குறைந்ததால் விலை திடீரென்று உயர்ந்து காணப்பட்டது. ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் நேற்று, நாட்டு சர்க்கரை 30 கிலோ எடையுள்ள 1,500 மூட்டைகள் வரத்தானது. ஒரு மூட்டை நாட்ட சர்க்கரை ரூ.1,200 முதல் ரூ.1,330 வரையில் விற்பனையானது. இதே போல உருண்டை வெல்லம் 30 கிலோ எடையுள்ள 1,400 மூட்டை வரத்தானது.
ஒரு மூட்டை ரூ.1,230 முதல் ரூ.1,350 வரை விற்பனையானது. அச்சு வெல்லம் 30 கிலோ எடையுள்ள 400 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை ரூ.1,300 முதல், ரூ.1,390 என்ற விலையில் விற்பனையானது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை வரத்து குறைந்து காணப்பட்டதால் மூட்டை ஒன்றுக்கு சராசரியாக ரூ.90 வரை விலை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர். https://www.tnagrisnet.tn.gov.in,
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/