ஈரோடு நவ 13:

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் பணிகளை இன்று முதல் 2 நாட்களுக்கு புறக்கணிக்கும் போராட்டம் நடத்துவது என்று வருவாய்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஏற்கனவே முடிவு செய்யபடி தேர்தல் செலவினங்கள் உடன் வழங்கவேண்டும், தேர்தல் மதிப்பூதியம் உடன் வழங்கவேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13ம் தேதி நாளை 14ம் தேதி நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் முழுமையாக புறக்கணிப்பது, வருவாய் வட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்ட அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோரும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது.

தமிழகத்தில் பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் பல மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் முழுமையாக ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/