ஈரோடு டிச 6:

ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்கத் தலைவர் முருகையா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாண்டியன், சம்மேளன துணைத்தலைவர் பொன்.பாரதி, பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டாஸ்மாக் நிர்வாகம் தற்போது டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றி அமைத்துள்ளனர்.

கொரோனா நீடிக்ககூடிய இந்த காலகட்டத்தில் இந்த நேர மாற்றம் என்பது ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தையும் உருவாக்கும். இரவு 10 மணி வரை நடை செயல்படுவது சமூகவிரோத செயல்களை ஊக்குவிப்பதற்கு சமமாகும். ஏற்கனவே செயல்பட்ட நேரமான காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதையே நீடிக்கவேண்டும்.

பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அனைத்து கடைகளுக்கும் நிர்வாகத்தால் புதிதாக வழங்கப்பட்ட லாக்கர்கள் வழங்கவேண்டும். கடையின் விற்பனை தொகையை சென்னை போன்று டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக வங்கி மூலம் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்

அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொது இடமாறுதல் அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமரா போன்று கடைக்கு வெளியிலும் கேமரா பொருத்த வேண்டும். பணி நிரந்தரம் பணிப்பாதுகாப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.உடையும் பாட்டில் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://www.tasmac.co.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/