ஆசனுார் ஆக 12:
ஈரோடு மாவட்டம் மலைப்பகுதி ஆசனுாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி உறுப்பினர் பேரவை கூட்டம் ஜி.கோபால் தலைமையில் நடந்தது. தாளவாடி ஒன்றிய செயலாளர் அருள்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, பழங்குடி மக்கள் சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்த், வக்கீல் செயராசு, பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார் உட்பட பலர் பேசினர்.
வனவிலங்கு தாக்குதலில் இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு அரசு பேரிடர் கால நிவாரண நிதியில் இருந்து, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். காயம் அடைந்தோர், பயிர் சேதத்துக்கு ஏற்ற நிவாரணம் வழங்க வேண்டும். வனத்தை சார்ந்த வாழும் இவர்களது வாழ்வாதாரம் வனத்துக்குள் உள்ளதால், வனத்துக்குள் செல்லாமல் இருக்க இயலாது. எனவே, அவர்கள் வனவிளை பொருட்கள் சேகரிக்கவும், கால்நடை மேய்க்கவும், கோவில் வழிபாட்டுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
வழித்தடம், வீட்டு தேவைக்காக காய்ந்த விறகுகளை சேகரிக்க அனுமதிக்க வேண்டும். வன உரிமை சட்டத்தில் உள்ள அனுமதிகளை அவர்களுக்கு முழுமையாக கிடைக்க செய்ய வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today