ஈரோடு ஆக 20:

கொரோனா பரவல் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிகளில் பெற்ற கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில குழு உறுப்பினர் முருகேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகவும், நோய் தடுப்பு நடவடிக்கையாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார தளங்களை திறக்க மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளித்துள்ளது.

இதனால், ஏழை, எளிய மக்கள், கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், வங்கி மற்றும் சுய உதவி குழுக்களில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த  மக்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் ஜப்தி போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today