ஈரோடு ஆக 6:

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், பஸ் ஸ்டாண்டில் ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தவிர, ஈரோட்டில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை உயர்ந்து, போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதால், ஈரோடு அருகே சோலார் பகுதியிலும், பிரமாண்ட பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே மக்களுக்கு பயன் உள்ள வகையில், ஈரோட்டில் 2 பஸ் ஸ்டாண்டுகளிலும் முன்பதிவு ரயில்வே கவுன்ட்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பஸ் ஸ்டாண்டில் ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர் இருப்பது போல ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் அமைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பலருக்கும் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மையப் பகுதியாக விளங்குவதால் ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர் அமைத்தால் ஈரோடு மாவட்ட பொது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும், ரயில் பயணத்தில் முதியோர் சலுகை ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மீண்டும் முதியோர் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு, முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today