ஈரோடு ஆக 3:
ஐ.டி.ஐ., படித்து மின்வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்த வேலைவாய்ப்பு கிடைக்காத தொழிலாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி.ஐ., படித்த 47 பேர் கடந்த 2018ம் ஆண்டு மின் வாரியத்தின் மூலம் அளிக்கப்படும் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சியை முடித்துள்ளோம்.
இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு கடந்த 1996 தி.மு.க., ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படவில்லை. இப்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் மீண்டும் பழைய நடைமுறையை பின்பற்றி எங்களுக்கு கள உதவியாளர் பணியை உடனடியாக வழங்க வேண்டும். இந்த பயிற்சி முடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதை கடந்தவர்கள் என்பதால் தகுதியான அனைவருக்கும் விரைவில் வேலைவாய்ப்பு உத்தரவை வழங்க வேண்டும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today