ஈரோடு ஆக 24:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் உடற்கல்வியியல் பட்டதாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: தமிழக பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பதிவுமூப்பின் அடிப்படையில் வேலை செய்யவில்லை.

முந்தைய ஆட்சியில் இருந்த அரசின் செல்வாக்கு காரணமாக தான் பலர் அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக சுமார் 50,000 பேர் காத்திருக்கின்றனர். மேலும் பலர் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக முறையான வகையில் உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.

பலருக்கு பதிவு மூப்பு இருந்தும் பணி கிடைக்கவில்லை. தற்போதுள்ள ஆசிரியர்கள் பலர் உடற்கல்வியியல் படிக்காமலேயே பணியில் இருந்து வருகின்றனர்.  இதனால் தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவுமூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today