ஈரோடு டிச 17:

பொல்லான் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் வடிவவேல் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோட்டில் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியது;

கொங்கு மண்டலத்தில் 1765 முதல் 1805-ம் ஆண்டு வரை இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலோயரை எதிர்த்து போரிட்ட மாவீரன் பொல்லான் வீரத்தையும், தீரத்தையும், நாட்டுப்பற்றையும் போற்றும் வகையில் அவருக்கு மணிமண்டபம், உருவச்சிலை மற்றும் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 3 ஆண்டுகளாக மாவீரன் பொல்லான் நினைவு நாள் ஆடி மாதம் 1-ம் தேதி அன்று அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலோயர்கள் மாவீரன் பொல்லானை சுட்டு கொலை செய்த இடமான அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் இடம் தேர்வு செய்து பொல்லானுக்கு முழு உவருச்சிலை, மணிமண்டபம் அமைக்க ரூ.1 கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பரிந்துறை செய்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் அருந்ததியர் சமூகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

பொல்லான் பிறந்த நாள் டிசம்பர் மாதம் 28ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. அதன்படி வரும் 28ம் தேதி அன்று அரசு விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொல்லான் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்த வேண்டும்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் 253-வது பிறந்த நாள் அரசு விழாவை மணிமண்டபம் அமைக்கப்படுகின்ற இடமான அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் அரசு விழாவை நடத்த வேண்டும். அனைத்து கட்சி, இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today