ஈரோடு அக் 9:

ஈரோட்டில் தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட நிருபராக பணி செய்த என்.செந்தில்குமார் என்பவர் கொரோனா நோய் தாக்கி இறந்தார். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை சேர்ந்தவர் என்.செந்தில்குமார். வயது 43. இவர் பத்திரிகைகளில் நிருபராக பணி செய்து, தற்போது தனியார் தொலைக்காட்சியில் மாவட்ட நிருபராக பணி செய்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தால் இதுவரை மூன்று நிருபர்கள் இறந்துள்ளனர். https://www.cdc.gov

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/