ஈரோடு சூலை 12:

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ஆற்றில் தேங்கிக்கிடக்கும் ஆகாயத்தாமரை கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் கழகம் நிறுவனதலைவர் பி.வடிவேல் தலைமையில் ஆற்றில் இறங்கி செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆகாயத்தாமரையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, ஆறு மாசுபடுகின்றது. இந்த தண்ணீரை பருகும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர் உடனடியாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் மாநில செயலாளர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகிகள் கே.மகேந்திரன், விஜயா, விஜயலக்ஷ்மி மற்றும் பலர் ஆற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியிலும் அரசிற்கு விழிப்புணர்வு தரும் வகையில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றினர். தொடர்ந்து செடிகளை அகற்றவில்லை என்றால் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகமே ஆற்றில் இறங்கி செடிகளை அகற்றும் என்று கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today