ஈரோடு சூலை 13: ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் திண்டல் கிளையில் உள்ள மின்னணு வணிகம் மூலம் நடத்தப்படும் மஞ்சள் ஏலம் விற்பனையை கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் ஏ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

கூட்டுறவு சங்கத்தின் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மஞ்சள் மூட்டைகள், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். மஞ்சள் விற்பனையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து பேசினார். இச்சங்கத்தினர் உறுப்பினர்களுக்கு விவசாய பயிர் கடன், வீட்டு மனை கடன் உள்ளிட்ட கடனுதவிகளை வழங்கினார்.

அங்கு நடக்கும் தேங்காய் பருப்பு ஏலத்தை பார்வையிட்டார். ஈரோடு சொசைட்டி சார்பில் தயாரிக்கப்படும் மங்களம் மசாலா பொருட்களின் உற்பத்தியை பார்வையிட்டு, அதன் விற்பனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

கூடுதல் பதிவாளர் பாலமுருகன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ந.மிருணாளினி, இணை பதிவாளர் எஸ்.பார்த்திபன், துணை பதிவாளர்கள் கந்தராஜா, மீனாஅருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுட‍ே
https://www:erode.today