சத்தியமங்கலம் சூலை 29:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி உயரம் உடைய மண்ணால் ஆன அணை. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீரை, நீராதாரமாக கொண்டு இந்த அணைக்கு நீர் வரத்தாகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களுக்கும் இந்த அணை நீர் பயன்படுகிறது. நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பெய்த கனமழையால், அணையின் நீர் வரத்து 13,000 கனஅடி வரை நீர் வரத்தாகி, அணையின் நீர்மட்டம் 100 கனஅடியை எட்டியது. நீர்வரத்தால் கடந்த 25ம் தேதி மாலை 29 -வது தடவையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் நீர் வரத்தை அப்படியே பவானி ஆற்று வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,297 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 470 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today