ஈரோடு நவ 24:

ஈரோட்டில் ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கமான ஈடிசியா செயற்குழு கூட்டம் தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்தது. பி.அருள்செல்வம் பேசினார். பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியாக இடம் ஒதுக்கி, கிளஸ்டர் உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குகின்றனர்.

இதனால், சுற்றுச்சூழல் மாசுபடாமல் மண் வளம் காக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பை, தட்டு போன்றவை மறுசுழற்சி மூலம் உருவாகிறது. இப்பொருட்களுக்கு எச்.எஸ்.என்., கோடு வழங்கவேண்டும். ஜி.எஸ்.டி.யில் விலக்கு தர வேண்டும். அனைத்து ஜவுளி பொருட்கள், அதனை சார்ந்த பணிகளுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பு செய்தால், நலிந்து வரும் ஜவுளி தொழில் காக்கப்படும்.

ஜவுளி தொழிலுக்கான நுால் விலையேற்றத்தை தடுக்கவேண்டும். ஈரோடு பகுதியில் பிரதான சாலைகளை முழுமையாக சீரமைத்து, புதிதாக அமைக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர். துணை தலைவர்கள் ஸ்ரீதர், கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர் சரவணபாபு உட்பட பலர் பங்கேற்றனர். https://www.sipcot.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/