ஈரோடு ஆக 25:

தமிழகத்தில் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகின்றது.

நேற்றுமுன்தினம் மாலை நேரத்தில் திடீரென்று பெய்யத்தொடங்கி மழை இரவு வரை ஆங்காங்கே பெய்து கொண்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை நிலவரம், ஈரோடு 12 மில்லிமீட்டர், பெருந்துறை 9, பவானி 2.8, கொடுமுடி 68, சென்னிமலை 9.4, மொடக்குறிச்சி 16, அம்மாபேட்டை 16.8, குண்டேரிப்பள்ளம் 30.6, வரட்டுப்பள்ளம் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 101.39 அடியாகவும், அணைக்கான வரத்து 623 கனஅடியாகவும், வெளியேற்றம் 600 கனஅடியாகவும் இருந்தது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today