ஈரோடு டிச 16:

காலிங்கராயன் வாய்க்காலில் 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். பவானிசாகர் அணையின் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரானது காலிங்கராயன் அணைக்கட்டு மூலம் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. நெல் தவிர மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்டவைகளும் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாகும். இந்தாண்டு முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த 2ம் தேதி நிறுத்தப்பட்டது.

நிலுவை பயிர்களுக்காக தற்போது பவானி ஆற்றில் வரும் உபரி நீர் வாய்க்காலில் சென்று கொண்டுள்ளது. இதனிடையே 2ம் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து வருகின்ற 25ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பொதுப்பணித்துறையினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today