ஈரோடு நவ 29:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தாலுகாக்களிலும் உள்வட்ட அளவில் பட்டா மாறுதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு உள்வட்டம் பி.பி.அக்ரகாரம், எஸ்.பி.அக்ரகாரம் வருவாய் கிராமங்களுக்கான பட்டா மாறுதல் முகாம் பி.பி.அக்ரகாரத்தில் நடந்தது. முகாம்முக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமை தாங்கினார்.
பட்டா மாறுதல் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேட்டு பொதுமக்கள் மனுக்கள் வழங்கினார்கள். முகாமில் திருமுகன் ஈவெரா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், பட்டா மாறுதல் உத்தரவுகளையும் வழங்கினார். முன்னதாக ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிலவருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அதிகாரி கோமதி மற்றும் துறை அதிகாரிகள், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். https://www.tnsic.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/