ஈரோடு அக் 28:
தீபாவளியையொட்டி ரேசன் கடைகள் 3 நாட்களுக்கு முழுமையாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது விநியோக திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள 1134 நியாய விலைக்கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்களில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
குடும்பஅட்டையில் இடம் பெற்றுள்ள குடும்பஉறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த விநியோகம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்புபவர்களுக்கு வழங்கப்படும். அனைவருக்கும் இதனை கட்டாயப்படுத்தவேண்டியதில்லை.
தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காத குடும்பஅட்டைதாரர்கள் வழக்கம் போல பண்டிகைக்காலம் முடிந்து 8ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.erode.nic.in, https://www.tnpds.org.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/