ஈரோடு செப் 26:

தஞ்சாவூரை சேர்ந்த ஜெ.இ.பாரதி என்ற, 22 மாத குழந்தைக்கு முதுகு தண்டுவட தசை நார் சிதைவு ஏற்பட்டது. இந்நோய்க்கு மருத்துவ செலவு, 16 கோடி ரூபாய் செலவாகும். இதனால், அக்குழந்தையை காப்பாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி ஈரோட்டில் தொண்டு நிறுவனம் சார்பில் ஜெகன் என்பவர் தலைமையில் குமலன்குட்டையில் இருந்து அரசு மருத்துவமனை வரை பேரணியாக வந்தனர். அக்குழந்தையின் உயிர் காக்க, 16 கோடி ரூபாய் தேவைப்படுவதால், 97917 93435 என்ற எண்ணுக்கு ஜிபே, பேடிஎம் போன்றவை மூலம் நிதியுதவி செய்ய அழைப்பு விடுத்தனர். அக்குழந்தையின் முழு விபரம், பணம் அனுப்ப வேண்டிய விபரத்துடன் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/