ஈரோடு சூலை 17:

ஈரோடு வ.உ.சி., பூங்கா பகுதியில் நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் இரவு மொத்த வியாபாரமும், மற்ற நேரங்களில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வ.உ.சி., பூங்கா பகுதிக்கு வந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறி குறைந்த விலையில் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் இங்கு எப்போதும் அதிகரித்துக் காணப்படும். தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விலை சற்று அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நேற்று கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், பாவைக்காய், தக்காளி, அவரைக்காய், முள்ளங்கி விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஈரோடு வ.உ.சி நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட்டில் விற்கப்படும்  காய்கறிகள் கிலோ விலை வருமாறு:-பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு -ரூ.25, அவரைக்காய் ரூ.35, முட்டைகோஸ் ரூ.12 முதல் ரூ.15 வரை, பாவைக்காய் ரூ.40 முதல் ரூ.50, கத்திரிக்கா ரூ.40, வெண்டைக்காய் ரூ.30 முதல் 40, பீர்க்கன்காய் ரூ.35 முதல் ரூ.40, வெண்டைக்காய் ரூ.25 முதல் ரூ.35, முள்ளங்கி ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம்- ரூ.40, தக்காளி ரூ.18 முதல் ரூ.20 வரை, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரை, பச்சை மிளகாய் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்றது. மற்ற இடங்களில் சில்லறை விற்பனைக்கு சற்று கூடுதலாக காய்கறிகள் விற்றது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today