ஈரோடு டிச 24:

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் காரீப் பருவத்தில் சாகுபடியான துவரை பயறு, மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், ஈரோடு விற்பனை குழுவில் செயல்படும் அந்தியூர், பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் ஜன., 15 முதல் மார்ச், 15 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இத்திட்டம் மூலம் கொள்முதலாகும் துவரை, அரசு நிர்ணயித்த தரத்தில் இருக்க வேண்டும். துவரைக்கான குறைந்த பட்ச ஆதார விலையாக, ஒரு கிலோ, 63 ரூபாய், குவிண்டால், 63 ஆயிரம் ரூபாய் என்ற ரீதியில் கொள்முதல் செய்யப்படும்.

இதற்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, இத்திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள், தங்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகலுடன் அந்தியூர், பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை தொடர்பு கெள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.tnpsc.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today