சத்தியமங்கலம் அக் 30:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்குள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பங்கி பூக்களை பறித்து சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் நடைபெறும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் விஜயதசமி, ஆயுத பூஜை ஆகிய நாட்களில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் கடந்த சில நாட்களாக விலை குறைந்து ஒரு கிலோ சம்பங்கி 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் சம்மங்கி பூக்களை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். சம்பங்கி பூக்களின் விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். https://www.erode.nic.in,
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/