ஈரோடு டிச 7:

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் செயல்பட்டு வந்த பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழுதடைந்து சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து அருகே உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக மாற்றப்பட்டு, தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது புதிய அலுவலக கட்டிடம் கட்ட 3 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டது.

தற்போது பணிகள் முடிந்து ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகியும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விரைவாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். https://www.erode.nic.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/