ஈரோடு டிச 4:

ஈரோடு குருசாமி மஹாலில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பு.அ.கோதைசெல்வி வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 20,978 பேர் இந்த அடையாள அட்டை பெற விண்ணப்பித்து 12,079 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீல நிற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தினத்துக்காக அனைத்து தாலுகா அலுவலகத்திலும் முகாம் நடத்தி ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தலும், உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, போட்டரி நாற்காலி, தையல் இயந்திரம், வங்கி கடன், தொழில் கடன், உதவித்தொகை என 8,341 பேர் பயனடைந்துள்ளனர் என்றார். ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.95,000 மதிப்பில் செயற்கை கை, ரூ.36,000 மதிப்பில் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் வாசிக்கும் கருவி, விருதுகள் வழங்கப்பட்டது. அந்தியூர் அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ஆனந்த், ரவிசந்திரன், கவிதா, இணை இயக்குனர் கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.  https://www.scd.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/