ஈரோடு நவ 27:
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் அனைத்து தாலுகாக்களிலும் மனு நீதி நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் நேரடியாக மனுக்கள் பெற்று விரைவாக தீர்வு காணப்படுகிறது.
அதன்படி ஈரோடு தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி (பொறுப்பு) ஜெயராணி தலைமை தாங்கினார். முகாமில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முதியோர் உதவித்தொகை, ரேஷன் ஸ்மார்ட் அட்டைகள் உள்பட பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சி பிரமுகர்கள், நிலவருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அதிகாரி சம்பத் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக தாசில்தார் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். https://www.tnsocialwelfare.org
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/