ஈரோடு டிச 6:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்து, பத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பில் கடனுதவிகள், இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.வங்கி உதவி பொது மேலாளர்கள் சந்திரமோகன், எஸ்.குமரேசன், வி.ராஜசேகரன், மேலாளர்கள் எஸ்.தமிழ்செல்வன், எல்.குமார், எஸ்.சாந்தி, ஆர்.சக்திபிரியா உட்பட பலர் பங்கேற்றனர். https://www.tnsocialwelfar.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/