ஈரோடு செப் 18:

மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க., கேட்டுக்கொண்டுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலை இல்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் போன்றவற்றை கண்டித்து நாளை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய அளவில் எதிர் கட்சிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு வடக்கு மாவட்டத்தில் 20ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் தங்களது இல்லங்கள் முன்பாக கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகள் தவறாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/