மொடக்குறிச்சி நவ 17:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உப விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,076 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 27 ரூபாய் 35 காசுக்கும் அதிகபட்ச விலையாக 33 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 33 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,087 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 34 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு 37 மூட்டைகள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 98 ரூபாய் 30 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 101 ரூபாய் 85 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 55 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 65 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது.
மொத்தம் 897 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 79 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு 1 இலட்சத்து 13 ஆயிரத்து 786 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இதுபோல, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம் நடைபெற்றது.
சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 61 மூட்டைகளில் 2 ஆயிரத்து 56 கிலோ எடையுள்ள நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 62 ரூபாய் 41 காசுக்கும், அதிகபட்ச விலையாக 70 ரூபாய் 60 காசுக்கும், சராசரி விலையாக 65 ரூபாய் 60 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக 1 இலட்சத்து 38 ஆயிரத்து 741 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். https://www.tnagrisnetn.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/