ஈரோடு நவ 22:
ஈரோடு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27 ம் தேதி நடக்க உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்போர் பங்கேற்று 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2, பட்டதாரி, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்பு, பணிகளுக்கும் தகுதியானவர்கள் பங்கேற்கலாம்.
அனுமதி இலவசம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தில் தொழில் முனைவோர் ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் ஆலோசனை பெறலாம். இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. கூடுதல் தகவல் பெற, 0424 2275860, [email protected] வாயிலாக அறியலாம். https://www.easc.ac.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/