ஈரோடு சூலை 6:

கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட வரிசையில் நிற்கத்தேவையில்லை என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்பொழுது நோய் தொற்றின் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 19,996 கா்ப்பிணி பெண்கள் உள்ளனர். அனைவருக்கும் குறுகிய காலத்தில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்யும் நாளில் இருந்தே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்காமல், நேரடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மலைப்பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.64 கோடி செலவில் 10 மாடிகள் கொண்ட பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது இணை இயக்குநர் ராஜசேகரன், துணை இயக்குநர் சவுண்டம்மாள், மருத்துவ அலுவலர் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today