கோபிசெட்டிபாளையம் சூலை 15:

கீழ்பவானி வாய்க்கால் பாசனங்களுக்காக கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 46 டன் விதை நெல் தயார் நிலையில் உள்ளது. தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்காலில் கடந்த ஏப்ரல் 22 முதல் முதல் போக சாகுபடிக்கு பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தரமான விதைகள் தயார் செய்யும் பணியையும் நிறைவு செய்துள்ளனர். விதை நெல் இருப்பு வைத்து இதுவரை ஏ.எஸ்.டி–16 ரகம் 40.50 டன், பி.பி.டி.5204 ரகம் 11.50 டன் என 52 டன் விதை நெல் விற்பனையானது. ஆகஸ்ட் ஒன்றாம்தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கு ஏ.எஸ்.டி.16 ரகம் ஒரு டன், பி.பி.டி.5204 ரகம் 20.50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தவிர ஐ.ஆர்.20 ரகம் 17 டன், ஏ.டி.டீ, 39 ரகம் 7.9 டன் இருப்பு வைத்துள்ளனர். இவற்றை 30 கிலோ விதை நெல் மூட்டையாக சான்று அட்டை இணைத்து வைத்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today