ஈரோடு சூலை 29:

ஈரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன், ஒன்டிக்காரன்பாளையம் ஆகிய மின் பாதைகளில் நெடுஞ்சாலை துறை மற்றும் ஈரோடு மாநகராட்சியின் பாதாள சாக்கடை புதைவட கழிவுநீர் குழாய்கள் பொருத்தும் பணி நடக்கிறது. அதனால் நேதாஜி ரோடு, அக்ரஹார வீதி, கச்சேரி வீதி, பெரியார் வீதி, பொன் வீதி, பிரகாசம் வீதி, சிவசண்முகம் வீதி, முத்துரங்கம் வீதி, குந்தவை வீதி ஆகிய பகுதிகளில் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் வில்லரசம்பட்டி நால் ரோடு, வீனஸ் கார்டன் ஆகிய பகுதிகளில் 29ம் தேதி வியாழக்கிழமை மற்றும் வரும் 31ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today