ஈரோடு டிச 1:

வெண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 4-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவாநகர்,

போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர் 19 ரோடு பகுதி, சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்து உள்ளார்.  https://www.tnebltd.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/