ஈரோடு டிச 17:

ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அதனால் ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நால் ரோடு, எஸ்.கே.சி. ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம் பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம் நகர், பழைய பாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு.

பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16 அடி ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, காந்தி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதனால் மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி நகர், வீரப்பம் பாளையம்,

நஞ்சனா புரம், தெற்கு பள்ளம், நல்லியம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி.கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன் பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராயபாளையம், சிந்தன் குட்டை,

ஆட்டையாம் பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி. நகர், தென்றல் நகர் பகுதி, முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today