ஈரோடு நவ 9:

ஈரோட்டில் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காமல் கழிவு நீரை வெளியேற்றி வந்த 3 ஆலைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது 3 டையிங் தொழிற்சாலைகள் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர். https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/