ஈரோடு சூலை 16 :

தமிழக அஞ்சல் துறை வட்டம் அளவில் வரும் 23ம் தேதி காலை 11:30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை ஜெனரல் போஸ்ட்மாஸ்டர் அலுவலகத்தில் அஞ்சல் நீதிமன்றம் நடக்க உள்ளது. அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கான குறைகளுக்கு தலைமை ஜெனரல் போஸ்ட்மாஸ்டர் தீர்வு காண உள்ளார். வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை , எம்.விஜயலட்சுமி, உதவி இயக்குனர் (எஸ்.பி– எப்.எஸ்), தலைமை ஜெனரல் போஸ்ட்மாஸ்டர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது [email protected] என்ற இணைய தளத்தில் DAK ADALAT என்று தலைப்பில் தெரிவித்து தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.மணியார்டர், பதிவுத்தபால், ஸ்பீடு போஸ்ட், வி.பி., பார்சல், பிற தபால் போன்றவை குறித்து, உரிய பதிவு எண், தேதி, பதிவு செய்த அலுவலகம், முழுமையான அனுப்புனர், பெறுனர் விலாசம் போன்றவைகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தபால் துறையில் உள்ள அனைத்து வகையான குறைகளுக்கும் உரிய ஆவணத்துடன் புகாரை அனுப்ப வேண்டும்.இத்தகவலை ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஸ்பொன் சைமன் டோபிஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today