பெருந்துறை சூலை 25:

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு முழு நேர பட்டய படிப்பு, நேரடி இரண்டாம் ஆண்டு முழு நேர பட்டய படிப்புக்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின், https://www.tngptc.in அல்லது https://www.tngptc.com என்ற இணைய தளங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிய வேண்டும். அல்லது பாலிடெக்னிக் சேவை மையத்தை அணுகலாம். முதலாமாண்டு சேர்க்கைக்கு, எஸ்.எஸ்.எல்.சி, தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாமாண்டு சேர்க்கைக்கு, மேல்நிலை கல்வி தேர்ச்சி, இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் என ஏதாவது ஒன்று படித்திருக்க வேண்டும். பதிவு கட்டணம், 150 ரூபாய். டி.டி., அல்லது இணைய வாயிலாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி.,க்கு பதிவு கட்டணமில்லை. கூடுதல் தகவலுக்கு, 96007 70081, 99520 75465, 99407 35303, 73977 83433 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Perundurai polytechnic admission.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today