ஈரோடு நவ 26:

மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொரு புதன் கிழமையும்மாசு இல்லாத அலுவலக நாளாக கடைபிடிக்கும் பொருட்டு, சைக்கிள், நடைபயணம், பொது போக்குவரத்து மூலம் அலுவலகம் வந்தனர்.

இதுபோன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுஅலுவலர்கள், பொது மக்கள் வாராந்திர மாசு இல்லாத நாளாக கடைபிடித்து, பொது போக்குவரத்தை பயன்படுத்தி, மாசை குறைக்க பங்களிப்பு செய்யவேண்டும், என கேட்டு கொண்டனர். காற்று மாசால் ஆண்டுக்கு, 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

எரிபொருள் பயன்படுத்துவதால் காற்று மாசு ஏற்படுகிறது. காற்று மாசில், 72 சதவீதம் வாகனத்தால் ஏற்படுகிறது. வாகன புகையில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹட்ரோ கார்பன், சல்பர் பை ஆக்சைடு, நுண் துகள்கள் வெளியேறி தீங்கு தருகிறது. இதனை தடுக்க மாசு வெளியேற்றாத, மாசை குறைக்க சைக்கிள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள், என வேண்டுகோள் விடுத்தனர். https://www.cpcb.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/