மொடக்குறிச்சி சூலை 17:

தமிழக அரசு சார்பில் பொல்லானின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் முத்துசாமி, கயல்விழி, மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 216வது நினைவு நாளை அரசின் சார்பில் மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் உருவப்படத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியது, முதல்வர் ஸ்டாலின், பொல்லான் நினைவு நாளை சிறப்பாக நடத்த உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் இங்கு வந்துள்ளோம். ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மாநாட்டில் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது  பொல்லான் படத்தை திறந்து வைத்து, பொல்லானுக்கு உரிய மணிமண்டபம், உருவச்சிலை அமைப்பு செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தார் .அந்த அறிவிப்பு நோக்கி தான் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய தினம் அரசு விழாவாக இல்லாமல் இருந்தாலும் கூட வரும் டிசம்பர் 28-ம் தேதி பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

அதற்குள் பொல்லானுக்கு மண்டபம், சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியிருந்தார். இதற்காக இன்று அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., டாக்டர் சி.கே.சரஸ்வதி, அ.தி.மு.க., சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், புதூர் கலைமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிச்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், மாவட்ட பொது செயலாளர் பாலசுப்ரமணியம், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.todayEdit