பங்களாபுதுார் சூலை 26:
பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை விளாங்கோம்பை மற்றும் கெம்பனுார் மலைக்கிராம மக்களுடன், போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி, விழிப்புணர்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு எஸ்.பி, சசிமோகனுக்கு மலைவாழ் குழந்தைகள் பூக்கள், வனப்பகுதி சிறப்புக்களை பரிசாக வழங்கி வரவேற்றனர். சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா, டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன், குழந்தை தொழிலாளர் மீட்பு பள்ளி ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ஆசிரியர்கள்கேசவன், சிவசக்தி, திட்ட இயக்குனர் சுப்பிரமணியன், பங்களாபுதார் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.பி, சசிமோகன், சட்ட விரோத செயல்கள், ஆதார் அட்டையின் முக்கியத்துவம், பெண் கல்வி, குழந்தை திருமணம் தடுத்தல் போன்றவை குறித்து பேசினார். விளாங்கோம்பை, கெம்பனுாரை சேர்ந்த 64 குடும்பத்தினருக்கு தலா 17 கிலோ அரிசி, 7 கிலோ காய்கறி, பெட்ஷீட், முகக் கவசம், துவரம் பருப்பு, பச்சை பயறு,சமையல் எண்ணெய், சேலை, வேட்டி, துண்டு, பனியன், லோயர், டிபன் பாக்ஸ், சமையல் பொருட்கள், எழுது பொருட்கள் போன்றவை வழங்கினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today