ஈரோடு ஆக 13:

ஈரோடு மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியேற்றி வைத்து, போலீஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார். எஸ்.பி., சசிமோகன், டி.ஆர்.ஓ., முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்கின்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகம் உள்ளதால், வழக்கமான கலை நிகழ்ச்சி, மக்கள் சந்திப்பு, தியாகிகள் கவுரவிப்பு, பரிசு வழங்குதல் போன்றவை நிறுத்தப்படுகிறது. இருப்பினும், கலெக்டர் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி, அதற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்படும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை போன்றவை வழங்க உள்ளனர்.இதற்காக ஈரோடு வ.உ.சி., மைதானம் மற்றும் ஆணைக்கல் பாளையம் ஆயுதப்படை மைதானத்திலும், ஆண் மற்றும் பெண் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடந்து வருகிறது. இவற்றை லோக்கல் டி.எஸ்.பி., பார்வையிட்டு வருகிறார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today