ஈரோடு சூன் 14: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பதிவு துவங்கியது.கொரானா பரவல், அதற்கான ஊரடங்கால் ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் அப் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதி தேர்வும், பொதுத்தேர்வும் ரத்தானது.

தேர்வு எழுதாமல் மாணவ, -மாணவியர் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் -2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.அதைப்போல் பிளஸ்- 1 சேர்க்கைக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் -1 சேர்க்கை நடத்தலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-1 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான சேர்க்கை தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும், கொரானா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு காலை வந்திருந்தனர்.மாணவ, -மாணவியர் தங்களுடைய பெற்றோருடன் வந்திருந்தனர். இதற்கிடையில் தமிழக அரசு கொரானா பாதிப்பு அதிகமாக உள்ள ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிளஸ் -1 மாணவ -மாணவியர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று திடீரென அறிவித்தது.இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிளஸ் -1 சேர்வதற்காக வந்திருந்தவர்களிடம் அவர்கள் பெயர், செல்போன் எண், எந்த பாடப்பிரிவில் படிக்க விரும்புகிறீர்கள் போன்ற விவரங்களை மட்டும் பதிவு செய்து கொண்டு அனுப்பினர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்- 1 மாணவர் சேர்க்கை நடக்காமல், பதிவு மட்டும் செய்யப்பட்டது.

நிருபர்.
ஈரோடு டுடே


==== Please visit the below websites for more current news
https://tamil.today
https://tamilcinema.today
https://thanjai.today
https://covai.today
https://dindigul.today
https://erode.today
https://madras.today
https://thechennai.today
https://madurai.today
https://nellai.today
https://thepudugai.today
https://thoothukudi.today
https://tiruppur.today
https://trichy.today
https://kollywood.today
https://shortfilm.today
https://tamil.domains
https://tamil.city
https://tamil.email
https://tamil.international
https://tamil.photos
https://tamil.reviews
https://tamil.support
https://tamilnews.club
https://tamilparty.com