ஈரோடு நவ 15:
வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 4.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களிலும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படுகிறது. தற்போது விடுபட்டவர்களை தேடி வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதனை, வாக்காளர் பட்டியல் அடிப்படையில் விடுதல் இன்றி தடுப்பூசி செலுத்தி, அறிக்கையாக வழங்கி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 13.50 லட்சம் பேர் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இரண்டாம் கட்ட தடுப்பூசி, 5.89 லட்சம் பேர் செலுத்தி உள்ளனர்.இந்நிலையில், 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, வரும், 30க்குள் வீடுவீடாக சென்று, 4.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதுபற்றி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட, 19 லட்சம் பேர் உள்ளனர். இதில், முதற்கட்ட தடுப்பூசி, 13.50 லட்சம் பேரும், இரண்டாம் கட்ட தடுப்பூசி, 5.80 லட்சம் பேரும் செலுத்தி உள்ளனர். முதற்கட்ட தடுப்பூசி செலுத்தாத, 4.50 லட்சம் பேர் உள்ளனர். வயது முதிர்வு, நோய், போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணத்தால், முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்தவில்லை. எனவே இவர்களது வீடுகளுக்கு சென்று, தடுப்பூசி செலுத்த முடிவு செய்து கடந்த, 6 முதல் வீடுவீடாக சென்று விசாரித்து, தடுப்பூசி செலுத்துகின்றனர்.
மாவட்ட அளவில், 219 குழு அமைத்து, பணி நடக்கிறது.இக்குழுவில், டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் நேரடியாக ஈடுபட்டு, தடுப்பூசி போடாதவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்துகின்றனர். வரும், 30க்குள், 4.50 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து பயணிக்கிறோம், என்றார். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/