ஈரோடு, அக். 1:

பவானி ஊராட்சி ஒன்றியம், கவுந்தபாடி ஊராட்சி, சின்னகவுண்டனூர் பகுதியில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்றவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்படக் கண்காட்சியினை 1,300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றனர். கண்காட்சியின் போது, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு குறித்து குறும்படம் மூலம் திரையிடப்பட்டது. https://www.tn.gov.in

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/