ஈரோடு நவ 15:

ஈரோடு மாவட்டத்தில் 8ம் கட்ட இரண்டு நாள் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது. இந்த முகாமின் மூலம் மாவட்டத்தில் 1.20 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த, தடுப்பூசி முகாம்களை அரசு தீவிரப்படுத்தி, 7 சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 8ம் கட்ட இரண்டு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று காலை 436 மையங்களில் நடந்தது. இதேபோல், இன்றும் (14ம் தேதி) மாவட்டத்தில் 447 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் முகாம்களிலும் சேர்த்து 1லட்சத்து 20ஆயிரம் பேருக்கு  தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/